Tuesday, January 30, 2018

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் அறிமுகம்


இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு

புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் அறிமுகம்

புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய வங்கியின் ஆளுநரிடம் இருந்து புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாளை நிதி அமைச்சர் இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த புதிய நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்
புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாளில் நான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
1000 ரூபாய் புதிய நாணயத் தாளில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள நான்கு பள்ளிவாசல்களின் படங்கள்  துருப்புச் சீட்டு போடப்பட்டதில் சாய்ந்தமருது பள்ளிவாசலின் படம் இடம்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது
.1.பேருவளை
 2.மூதூர்,
3. சாய்ந்தமருது

4.புத்தளம்.





No comments:

Post a Comment