Wednesday, January 31, 2018

சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியிலுள்ள அபாயகரமானதும் ஒடுக்கமானதுமான பாலம் அரசியல்வாதிகள் எவரும் கருத்தில் எடுப்பதாக இல்லை


சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியிலுள்ள

அபாயகரமானதும் ஒடுக்கமானதுமான பாலம்

அரசியல்வாதிகள் எவரும் கருத்தில் எடுப்பதாக இல்லை

மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது பழைய ஆஸ்பத்திரி வீதியிலுள்ள தோணாவுக்கு மேலாக குறுக்காக அமைக்கப்பட்டுள்ள அபாயகரமானதும் ஒடுக்கமானதுமான பாலமே இது!
இப்பாலத்தின் ஊடாகத்தான் பழைய ஆஸ்பத்திரி உப தபாலகம், /மு றியாழுல் ஜன்னா வித்தியாலயம், தலைவர் அஷ்ரஃப் ஞாபகர்த்த பூங்கா மற்றும் சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலை என்பன போன்ற காரியாலயங்களுக்குச் செல்ல வேண்டும்.
மிக அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியான நிலையில் விரிவாக்கப்படல் வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் விருப்பமாகும்.
அமைச்சரவை அனுமதியுடன் தோணா அபிவிருத்தி எனக்கூறி 16 கோடிக்கும் அதிக தொகை நிதியைப் பெற்று தோணாவில் உள்ள சல்வீனியாக்களை பாரிய இயந்திரங்கள் கொண்டு அள்ளுவதற்கும் முண்டுக்கற்களை அடுக்குவதற்கும் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்,அபாயகரமான இந்தப் பாலத்தைப் பற்றி அரசியல்வாதிகள் எவரும் சிந்தித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏ.எல்.ஜுனைதீன்,
ஊடகவியலாளர்.  


No comments:

Post a Comment