Thursday, February 1, 2018

சாய்ந்தமருதில் தேசிய சுதந்திர தின நிகழ்வை விமர்சையாகக் கொண்டாட ஏற்பாடு


சாய்ந்தமருதில் தேசிய சுதந்திர தின நிகழ்வை

விமர்சையாகக்  கொண்டாட ஏற்பாடு


எதிர்வரும் 04. ம் திகதி (ஞாயிறு) தேசிய சுதந்திர தின நிகழ்வை சாய்ந்தமருதில் மிக விமசையாக கொண்டாட சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தலைமையில், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், பொது நிறுவனங்கள்.இணைந்து, திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மண்ணுக்கு கிடைத்த கௌரவமான 1000 ரூபா நாணயத்தில் சாய்ந்தமருது பள்ளிவாசல் படத்தினை வெளியிட்டமைக்கு கௌரவப்படுத்தும் நோக்கில் இந்த சுதந்திர தின நிகழ்வு மிக கோலாகலமாக நடாத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் சாய்ந்தமருது மக்கள் அனைவரும் கலந்து ஊரின் ஒற்றுமையை வெளிக்காட்ட அணிதிரளுமாறு அன்பாய் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

காலம் : 04.02.2018 (ஞாயிறு)
நேரம் : 09.00am மணி
இடம் : ஜும்ஆப்  பள்ளிவாசல் வளாகம் (சாய்ந்தமருது)

**குறிப்பு**

சுதந்திர தினத்தில்  சாய்ந்தமருதில் உள்ள சகல வர்த்தக நிலையங்களிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.



No comments:

Post a Comment