Friday, February 2, 2018

ஜனாதிபதியின் மகள் சதுரிக்கா சிறிசேன ஓட்டமாவடிக்கு விஜயம்


ஜனாதிபதியின் மகள் சதுரிக்கா சிறிசேன

ஓட்டமாவடிக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளரின் மக்கள் தொடர்புக் காரியாலயத்தை நேற்று மாலை திறந்து வைத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி அழைப்பினை ஏற்று சதுரிக்கா சிறிசேன நேற்றைய தினம் ஓட்டமாவடிக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது மக்கள் தொடர்புக் காரியாலயத்தை திறந்து வைத்ததோடு, அல் கிம்மா நிறுவனத்தினையும் பார்வையிட்டதுடன், எல்லை வீதி மீராவோடையில் உள்ள அந்நூர் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிருக்கான சந்திப்பிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment