Tuesday, April 3, 2018

ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பஸ் விபத்து: 37 பேர் காயம்




ஆடைதொழிற்சாலை ஊழியர்கள்

பயணித்த பஸ் விபத்து:
37 பேர் காயம்

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் பயணித்த பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில், 37 பேர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம்சிலாபம் வீதியில் ஆராச்சிக்கட்டுவ, எலம்பவட்டுவன பிரதேசத்தில் இன்று (03) காலை இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்களுள் 36 பெண்களும் பஸ்ஸின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









No comments:

Post a Comment