Thursday, April 26, 2018

வெசாக் வைபவத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படும்


வெசாக் வைபவத்தை முன்னிட்டு
மதுபானசாலைகள், இறைச்சி
விற்பனை நிலையங்கள் மூடப்படும்


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் , 30 ஆம் திகதி ஆகிய இரு தினங்களை அரச வெசாக் தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
2018 அரச வெசாக் வைபவத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள், இறைச்சிக்காக விலங்குகளை உயிரிழக்க செய்யும் இடங்கள் கஷினோ சூதாட்ட நிலையங்கள் மற்றும் களியாட்ட இடங்கள் மூடப்படவுள்ளன.
வெசாக் வைபவத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் மே மாதம் 2 திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக ஏப்ரல் மாதம் 29 ஆம் 30 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளை மூடுவதற்கும் அங்காடி வர்த்தக நிலையங்கிலுள்ள மது விற்பனையை நிறுத்துவதற்கும் , இறைச்சிக்காக விலங்குகளை உயிரிழக்க செய்யும் இடங்கள் , குதிரை பந்தைய நிலையம், கஷினோ மண்டபம், களியாட்ட இடங்களை மூடுவதற்கும் , இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் , அங்காடி வர்த்தக நிலையங்களிலுள்ள இறைச்சி விற்பனையை நிறுத்தவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment