Friday, May 4, 2018

இரண்டு ஆதார வைத்தியசாலைகள் அமைந்துள்ள கல்முனையில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) ஒன்று திறக்கப்படாதது குறித்து மக்கள் கவலை

இரண்டு ஆதார வைத்தியசாலைகள் அமைந்துள்ள
கல்முனையில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை
(ஓசுசல) ஒன்று திறக்கப்படாதது குறித்து மக்கள் கவலை



இலங்கையின் கிழக்கு முஸ்லிம்களின் முக்கிய நகரமான (மர்ஹும் அஷ்ரப் அவர்களால் முக வெற்றிலை எனக் கூறப்பட்ட)  கல்முனையில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) ஒன்று திறக்கப்படாது இருப்பது குறித்து கல்முனை மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்ட்த்தின் கரையோரப்பிரதேசத்தில் ஒரே நேரத்தில் கல்முனை, சம்மாந்துறை,அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய இடங்களில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த்து.
நிந்தவூர், அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) திறக்கப்படுள்ள நிலையில் கல்முனை, சம்மாந்துறை பிரதேசங்கள் புறக்கனிக்கப்பட்டிருக்கின்றன.
கல்முனைப் பிரதேசத்தில் இரண்டு ஆதார வைத்தியசாலைகள், ஒரு மாவட்ட வைத்தியசாலை,  மூன்று பிரதேச வைத்திசாலைகள், பல தனியார் வைத்தியசாலைகள் அமைந்திருந்தும் கல்முனையில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) ஒன்று ஆரம்பத்தில் திறக்கப்படாது காலத்தைக் கடத்துவது ஏன் என இங்குள்ள மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கல்முனைப் பிரதேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி கல்முனையில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) திறக்கப்படும் விடயத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களே! இது உங்களின் கவனத்திற்கு.





No comments:

Post a Comment