Friday, June 1, 2018

காணாமல் போனோருக்கான பணியகம் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடம்


காணாமல் போனோருக்கான பணியகம்
இராஜாங்க அமைச்சர் .எச்.எம்.பௌசியிடம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் இருந்த காணாமல் போனோருக்காக பணியகம், தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர் .எச்.எம் பௌசியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் போனோருக்கான பணியகத்தை இராஜாங்க அமைச்சர் .எச்.எம்.பௌசியிடம் ஒப்படைத்துள்ளார்.
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் முன்னதாக, காணாமல் போனோருக்கான பணியகம் ஜனாதிபதியின் பொறுப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment