Sunday, July 29, 2018

பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன் மட்டக்களப்பில் தரையிரங்கிய பிரதமர் ரணில்


பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன் மட்டக்களப்பில்
தரையிரங்கிய பிரதமர் ரணில்

மட்டக்களப்பு - ஆரையம்பதிக்கு சற்றுமுன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, பிரதமருக்கு சிறப்பான வரவேற்பினை வழங்கியுள்ளார்.
பிரதமர் மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கான புதிய இரண்டு மாடி கட்டடமொன்றை திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்களும் இணைந்துள்ளனர்.




No comments:

Post a Comment