Friday, August 31, 2018

15 கோடி ரூபாய் பெறுமதி தங்கத்தை கடத்திய வெளிநாட்டவர் கைது


15 கோடி ரூபாய் பெறுமதி தங்கத்தை கடத்திய
வெளிநாட்டவர் கைது



சட்டவிரோதமாக 15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்தி வந்த இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இந்த நபர் இன்று (31), அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் நாட்டில் இருந்து வந்த குறித்த இந்திய பிரஜையிடம் இருந்து 20 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர், இந்தியாவைச் சேர்ந்த 47 வயதான போசாலே தர்மராஜ் கங்காதர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், தலா ஒரு கிலோவைக் கொண்ட 20 தங்கக் கட்டிகளை தனது உடலின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் மறைத்து வைத்து, விமான நிலையத்திலிருந்து வெளியில் செல்லும் நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் தங்கத்தின் இறக்குமதிக்கான வரியை அதிகரித்ததன் காரணமாக தற்போது வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்திருப்பதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



No comments:

Post a Comment