எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு
வேறொரு நபரை நியமிக்க முடியாது
சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு



எதிர்க்கட்சித் தலைவரை மாற்றும் அதிகாரம் தன்னிடம் கிடையாது என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு அல்லது பாரம்பரிய நடைமுறைக்கு அமைவாக எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் வேறொரு நபரை நியமிக்க முடியாது என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பிரித்தானிய பாரம்பரிய அல்லது உலகில் ஏனைய சம்பிரதாயத்திற்கமைவாக இதனை செய்யமுடியாதென்றும் சுட்டிகாட்டியுள்ளார்.
பாராளுமன்ற விவாதத்திற்கு நேர ஒதுக்கீடு செய்யும் பொழுதும் பாராளுமன்ற தெரிவிக்குழு சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்கட்சிக்கு தற்பொழுது வழங்கப்படும் நேர ஒதுக்கீடு மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி சமீபத்தில் சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ஈடுபடுத்துமாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top