தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பொழுது
அறவிடும் கட்டணத்தில் திருத்தம்


தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பொழுது அறவிடும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த கட்டணம் இறுதியாக 1980ம் ஆண்டில் திருத்தப்பட்டதாக ஆட்பதிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் பொழுது அறவிடப்படும் கட்டணம் மூன்று(3.00) ரூபா ஆகும். இது நூறு ரூபாவால் அதிகரிக்கிறது.
தேசிய அடையாள அட்டையில் திருத்தத்தை மேற்கொள்ளும் போது அதற்காக அறவிடப்படும் கட்டணம் 15.00 ரூபா ஆகும்.
அத்தோடு இத்தொகை 250 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
மீண்டும் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் பொழுது அதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படும்.
தற்போது இந்த கட்டணம் 15 ரூபா ஆகும். புதிய கட்டணம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய கட்டண முறை செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, செப்டெம்பர் 01 முதல், தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணங்கள் வருமாறு:
முதற் தடவை விண்ணப்பிக்க - ரூபா 100
இணை பிரதியை பெறல் - ரூபா 500
திருத்தம் மேற்கொள்ளல் - ரூபா 250

(காலவதியான) புதுப்பித்தல் - ரூபா 100

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top