Thursday, August 30, 2018

இலங்கையில் நடந்த பிரமாண்ட நிகழ்வு! வரலாற்றில் சாதனையாகுமா? சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சத்துர சேனாரத்னவின் திருமணம்! இணையத்தில் வெளியான காணொளி



இலங்கையில் நடந்த பிரமாண்ட நிகழ்வு!
வரலாற்றில் சாதனையாகுமா?
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன்
சத்துர சேனாரத்னவின் திருமணம்!
இணையத்தில் வெளியான காணொளி

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாளிகையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சத்துர சேனாரத்ன இன்றை தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
கொத்தலாவல பாதுகாப்பு வைத்திய பீடத்தின் மருத்துவ மாணவியான சரூபா சமன்கி மனதுங்க என்ற பெண்ணுடன் சத்துர சேனாரத்ன திருமண பந்தத்தில் இணைந்தார்.
பிரதமர் ஒருவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பிரமாண்டமான திருமண வைபவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த திருமண நிகழ்விற்காக அச்சிடப்பட்ட விசேட அழைப்பிதழ் ஒன்றிற்கு சுமார் 8 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
உண்மையான ரோஜா பூக்களை பயன்படுத்தி திருமண அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு அழைப்பிதலுக்காக சுமார் 8000 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
பிரமாண்டமான திருமண வைபவத்தில் சமகால அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், ராஜதந்திரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.





No comments:

Post a Comment