Thursday, August 30, 2018

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இன்பராசாவுக்கு எதிராக கிண்ணியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு


முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்
இன்பராசாவுக்கு எதிராக
கிண்ணியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு

புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இன்பராசாவுக்கு எதிராக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முறைப்பாட்டை கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி நேற்று பதிவு செய்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இன்பராசா என்பவரால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பொன்றில் காத்தான்குடி, மூதூர், கிண்ணியா உட்பட முஸ்லிம்களிடம் விடுதலைப் புலிகளின் 5000ற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனால் இந்நாட்டில் சிங்கள, தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறிய கருத்து குறித்து ஒரு சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது.
இந்த நிலையில், உண்மைக்குப் புறம்பான இந்தவிடயம் குறிப்பிட்ட பிரதேச மக்களை மாத்திரம் அன்றி இந்த நாட்டு முஸ்லிம்கள் அனைவரின் உள்ளங்களையும் மிகவும் புன்படுத்தியுள்ளதுடன், முஸ்லிம்களுக்கு எதிராக ஏதும் திட்டமிட்ட சதி ஒன்று அரங்கேற்றப்படலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியள்ளது.
எனவே இவ்வாறான இன, மத பேதங்களை உண்டாக்கும் சதிகாரர்களுக்கு எதிராக எமது அரசும் பொலிஸாரும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி இந்த முறைப்பாட்டை  செய்துள்ளார்.




No comments:

Post a Comment