Wednesday, August 29, 2018

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளார்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி
அடையாளம் காணப்பட்டுள்ளார்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.  
முல்லைத்தீவு - முறுகண்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய கறுப்பையா நித்தியகலா என்பவரே பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் கண்டுப்பிடிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சடலத்தின் அருகிலிருந்து சிவில் பாதுகாப்பு படையாளிகள் அணியும் இடுப்புப்பட்டி மற்றும் பேனை என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சடலமாக மீட்கப்பட்டவர் அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண் உத்தியோகத்தரின் சடலமே இது என்ற தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களால் சடலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 








No comments:

Post a Comment