Saturday, September 1, 2018

கொழும்பிலிருந்து சென்ற காரொன்று மரத்துடன் மோதியது


கொழும்பிலிருந்து சென்ற காரொன்று
மரத்துடன் மோதியது

கொழும்பிலிருந்து சென்ற காரொன்று ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் வைத்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த விபத்து இன்று அதிகாலை லிந்துலை, லோகி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிமடை நோக்கி பயணித்த குறித்த காரில் சாரதி மட்டுமே பயணித்த நிலையில், அவர் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
கார் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், காயமடைந்த சாரதி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நித்திரை கலக்கமே விபத்திற்கு காரணம் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் லிந்துலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.






No comments:

Post a Comment