Saturday, September 29, 2018

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் இல்லை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு


இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் இல்லை
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

இலங்கைக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கைகளும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுனாமி ஆபத்துக்கள் உள்ளதாக பரவும் கட்டுக்கதைகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடல் பிரதேசத்தில் வாழும் மக்கள் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுனாமி ஆபத்துக்கள் ஏற்படுமா என்பது தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 380 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment