Monday, October 1, 2018

ஒரு கோடியே 30 இலட்சம் பெறுமதியுடைய 20 தங்கக் கட்டிகளுடன் இருவர் கைது


ஒரு கோடியே 30 இலட்சம் பெறுமதியுடைய
20 தங்கக் கட்டிகளுடன் இருவர் கைது



ஒரு கோடியே 30 இலட்சம் பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 8.30 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த UL 226 இலக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்திலேயே இவர்கள் இலங்கை வந்துள்ளனர். 44 வயதுடைய திகாரிய பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான நபருடன் மேலுமொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment