Monday, October 29, 2018

கட்சித் தலைவர் ஒருவரின் விலை 50 கோடியா? அமைச்சுப் பதவி வகித்தவர்களுக்கு 30 கோடியா? கட்சித் தாவல் தொடர்பான விபரங்கள்


கட்சித் தலைவர் ஒருவரின் விலை 50 கோடியா?
அமைச்சுப் பதவி வகித்தவர்களுக்கு 30 கோடியா?
கட்சித் தாவல் தொடர்பான விபரங்கள்

கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்த ருவான் விஜேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக் மற்றும் மைத்திரிபால சிறிசேன தரப்பு கட்சித் தலைவர்களுக்கு 500 மில்லியன் ரூபாவினையும், அமைச்சுப் பதவி வகித்தவர்களுக்கு 300 மல்லியன் ரூபாவினையும் விலையாக பேசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சித் தாவும் உறுப்பினர்களுக்கு பாரிளவில் பண வெகுமதி வழங்குவதாக பேரம் பேசப்பட்டு வருகின்றது என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment