Wednesday, October 3, 2018

இந்த உறுதிமொழியாவது நிறைவேற்றப்பட்டதா? ஹாஜரா ரவூப் அறக்கட்டளை அரபுத் தமிழை வளரப்பதற்கான முயற்சி


இந்த உறுதிமொழியாவது நிறைவேற்றப்பட்டதா?

ஹாஜரா ரவூப் அறக்கட்டளை
அரபுத் தமிழை வளரப்பதற்கான முயற்சி


வழக்கொழிந்துள்ள அரபுத் தமிழை புத்துயிர்பெறச் செய்யும் நோக்கில், காலஞ்சென்ற தனது தயாரின் நினைவாக குடும்பத்தினர் சகிதம் இணைந்து ஹாஜரா ரவூப் அறக்கட்டளையை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த ஆண்டு(2017) செப்டெம்பர் மாதம் அறிவித்திருந்தார்.
தன் தாயார் ஹாஜரா ரவூப் அரபுத் தமிழில் அதிக ஈடுபாடுள்ளவர். அதுபோல பாட்டனார் உதுமாலெப்பை பெரிய ஆலிம் சாஹிப் அரபுத் தமிழில் சிறந்த தேர்ச்சியுள்ளவராக திகழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹாஜரா ரவூப் அறக்கட்டளை மூலம் அரபுத் தமிழை வளரப்பதற்கான முயற்சிகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். அமைச்சர்  ரவூப் ஹக்கீம் அவர்களின் இந்த உறுதிமொழியாவது நிறைவேற்றப்பட்டதா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment