Tuesday, October 30, 2018

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை கூட்டப்படும்




பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை கூட்டப்படும்



பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டும் தனது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக கட்சி தலைவர்களிடம் சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.
நாடு நெருக்கடியில் வீழ்வதை தடுப்பதற்கு, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சபாநாயகர் கரு ஜெயசூரிய தயவான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய, சபாநாயகர் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.


ஜனநாயகம், நல்லாட்சிக்கான ஆணையைப் பெற்ற ஒருவர், நாடாளுமன்றத்தை 18 நாட்களுக்கு முடக்கி வைத்திருப்பதை, தன்னால் நம்ப முடியவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் சபாநாயகர் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment