Tuesday, October 30, 2018

இலங்கையில் இரண்டு பிரதமர்கள்! பிரித்தானியா விடுத்த அவசர அறிவிப்பு


இலங்கையில் இரண்டு பிரதமர்கள்!
பிரித்தானியா விடுத்த அவசர அறிவிப்பு



பிரித்தானியா தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவையே பிரதமராக கருதுவதாக அறிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று உத்தியோகபூர்வமாக பதவி ஏற்றுள்ள நிலையில் இன்று ரணிலை தான் பிரதமராக கருதுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியூகோ ஸ்வாயார் நாடாளுமன்றில் இலங்கை நிலைமை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை 19ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்மறையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவையே பிரதமராக கருதுகின்றது. துரித கதியில் இலங்கையில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார செயலாளர் ஜெர்மனி ஹன்ட், “பிரதமர் ரணிலின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேசினேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment