Friday, January 4, 2019

மஞ்சந்தொடுவாய், ஜின்னாஹ் வீதியிலுள்ள வீடொன்றில் எரிகாயங்களுடன் 3 பிள்ளைகளின் தாயின் சடலம் மீட்பு


மஞ்சந்தொடுவாய், ஜின்னாஹ் வீதியிலுள்ள வீடொன்றில்
எரிகாயங்களுடன் 3 பிள்ளைகளின் தாயின் சடலம் மீட்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய், ஜின்னாஹ் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம், தீயில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம், நேற்று 2018.01.03 ஆம் திகதி  மாலை இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான 35 வயதுடைய சித்தி றசீனா இக்பால் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்காடுகின்றது.

சடலம், பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment