Tuesday, January 1, 2019

3000 ரூபாய் பணம் மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக அறவிடப்படுவதாக தெரிவிப்பு! வசதியில்லாததால் கல்வி கற்காதிருக்கவும் முடிவாம் பரீட்சையில் சாதனை படைத்த சம்மாந்துறையில் சம்பவம்


3000 ரூபாய் பணம் மாணவர்களிடம்
வலுக்கட்டாயமாக அறவிடப்படுவதாக தெரிவிப்பு!
வசதியில்லாததால் கல்வி கற்காதிருக்கவும் முடிவாம்
பரீட்சையில் சாதனை படைத்த
சம்மாந்துறையில் சம்பவம்



இன்று சம்மாந்துறை அல் முனீர் பாடசாலை மாணவர் ஒருவரை சந்தித்த போது, அங்கு மாணவர்களிடமிருந்து 3000 ரூபாய் வலுக்கட்டாயமாக அறவிடப்படுவதாகவும், தனக்கு அதனை வழங்குமளவு வசதியில்லை என்பதால் பாடசாலை செல்ல விருப்பமில்லை என கூறினார்.

அரசாங்கமோ இலவச கல்வி வழங்குகிறது. எம்மவர்களோ பணம் அறவீடு செய்கின்றனர். இங்குள்ள அதிபர் ஒரு தற்காலிகமானவர் என்பது இப் பிரச்சினை தோன்ற காரணமாக இருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது. இது நேரடி, மறைமுக காரணங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இப் பாடசாலை அதிபருக்கு தகுதியானவர்களை விண்ணப்பிக்குமாறு பத்திரிகைகளில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள போதும், இன்னும் அதற்கான நேர்முகப் பரீட்சை எதுவும் நடைபெறவில்லை. இதன் பின்னால் அரசியல் அழுத்தம் உள்ளதா என்ற சந்தேகம் நிலவுகின்றது. இவ் விடயத்தில் ஆழமாக செல்ல விரும்பவில்லை.

எனினும், அரச பாடசாலையில் பணம் அறவீடு செய்யும் விடயமும் ( இப் பாடசாலையில் அதிகமான ஏழை மாணவர்களே கல்வி கற்கின்றனர்), தொடர்ந்தும் தற்காலிக அதிபரை கொண்டு பாடசாலையை நிர்வகிக்கும் செயற்பாடும் ஒரு போதும் ஜீரனிக்க முடியாது.
Misbahul Haq Abdul Kareem


No comments:

Post a Comment