Thursday, January 3, 2019

கிழக்கு மாகாண ஆளுநராக அசாத் சாலி? வெளிவந்துள்ள தகவல்


கிழக்கு மாகாண ஆளுநராக அசாத் சாலி?
வெளிவந்துள்ள தகவல்



கிழக்கு மாகாணத்திற்கான புதிய ளுநர் இன்றைய தினம் பிற்பகல் அளவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

மாகாண ஆளுநர்களை உடனடியாக பதவி விலகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்திருந்தார்.

மாகாண ஆளுநர்களில் மாற்றங்களை செய்யும் நோக்கில் ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்திருந்ததாக சில மாகாண ஆளுநர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே தற்போது கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment