Thursday, January 3, 2019

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்


புதிய கடற்படைத் தளபதி
ஜனாதிபதியை சந்தித்தார்

புதிய கடற்படைத் தளபதியாக பணிகளை பொறுப்பேற்றுக் கொண்ட வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இன்று (03) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தார்.

புதிய கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் பாரம்பரியத்திற்கேற்ப ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதி ஜனாதிபதியைச் சந்தித்ததுடன், சம்பிரதாய முறைப்படி நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.



No comments:

Post a Comment