Friday, January 4, 2019

அமைச்சர்கள் சிலரின் அதிரடி முடிவு! மீண்டும் புதிய அமைச்சரவை பாலித ரங்கே பண்டாரவும் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்


அமைச்சர்கள் சிலரின் அதிரடி முடிவு!
மீண்டும் புதிய அமைச்சரவை
பாலித ரங்கே பண்டாரவும் அமைச்சராக
நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்



சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் தமது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரியவருகிறது.

சிலர் தமது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்யும் அதேவேளை, புதிய அமைச்சர்கள் பதவிப் பிமாணம் செய்யவுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக வாக்குறுதி வழங்கிய, அமைச்சர்களான திலக் மாரப்பன, மலிக் சமரவிக்ரம ஆகியோர் அமைச்சு பதவியை ராஜனினாமா செய்யவுள்ளனர்.

அதன் பின்னர் ஏற்படும் வெற்றிடத்திற்கு பாலித ரங்கே பண்டார நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமைச்சின் பொறுப்புகள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானியும் திருத்தம் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


No comments:

Post a Comment