Thursday, January 3, 2019

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில்
மாணவர்கள்  வரலாற்றுச் சாதனை

2018 இல் இடம் பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய மாணவர்கள் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வருடத்தில் இம் மஹா வித்தியாலயத்தில் இருந்து 9 மாணவர்கள் வைத்திய துறைக்கும்,4 மாணவர்கள் பொறியியல் துறைக்கும்,4 மாணவர்கள் உயிர் முறைமைத் தொழில் நுட்பத் துறைக்கும்,6 மாணவர்கள் பொறியியல் தொழில் நுட்பத் துறைக்கும், 6 மாணவர்கள் வர்த்தகத் துறைக்கும்,5 மாணவர்கள் கலைத் துறைக்கும் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர்.

இதில் மாவட்ட மட்டத்தில் கணிதப்பிரிவு,உயிர் முறைமைத் தொழில் நுட்பப் பிரிவு,பொறியியல் தொழில் நுட்பப் பிரிவு ஆகியவற்றில்  1ம் இடத்தையும்தேசிய ரீதியில் பொறியியல் தொழில் நுட்ப பிரிவில் இரண்டாமிடத்தையும் மாணவர்கள் தட்டிக் கொண்டது இப்பாடசாலையின் மிகப் பெரிய வெற்றியாகும்.







No comments:

Post a Comment