Wednesday, January 30, 2019

அனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தை உருவாக்குகிறார் மஹிந்த


அனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தை
உருவாக்குகிறார் மஹிந்த

அனைத்துலக உறவுகளுக்கான மஹிந்த ராஜபக்ஸ நிலையத்தை உருவாக்கும் முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ இறங்கியுள்ளார்.

அனைத்துலக உறவுகளுக்கான மஹிந்த ராஜபக்ஸ நிலையத்தை உருவாக்குவதற்கான ஆவணங்களில், மஹிந்த ராஜபக்ஸ கடந்த 29ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் பங்கேற்றுள்ளார்.

அனைத்துலக உறவுகள், இராஜதந்திரம் மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக்கான உலகத்துக்குள் நுழைவதற்காக முதல் படியாக இந்த நிறுவகம் இருக்கும் என்றும் மஹிகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment