Sunday, February 3, 2019

தேசிய அரசில் இணையும் சுதந்திரக் கட்சியின் 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்


தேசிய அரசில் இணையும் சுதந்திரக் கட்சியின்
10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்



ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் அமைக்கப்பட உள்ள புதிய தேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்ளவிருப்பதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசிய முன்னணி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

அதன் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி நம்புவதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment