Wednesday, February 27, 2019

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நிகழ்ச்சி நிரல் அமைச்சரவை கவனத்தில்


2019ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத்திட்டம்
மார்ச் மாதம் 5 ஆம் திகதி
நிகழ்ச்சி நிரல் அமைச்சரவை கவனத்தில்



 சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
                 
இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரம சிங்க சமர்பித்த வரவு செலவுத்திட்ட நிகழ்ச்சி நிரலை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

அது தொடர்பான அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட விபரம் பின்வருமாறு:

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரவு செலவு திட்ட உரை ( வரவு செலவு திட்ட 2ஆவது வாசிப்பு 2019ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் 2019.03.06 தொடக்கம் 2019.03.12 திகதி வரையிலும் குழுநிலை விவாதம் 2019.03.13 தொடக்கம் 2019.04.05 திகதி iயில் நடத்துவதற்கும் வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு 219.04.05ஆம் திகதி நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment