Friday, February 1, 2019

இலங்கை மின்சார சபையின் புதிய கட்டிட திறப்பு விழா ரத்தும் கல்முனை அரசியல் நிகழ்ச்சி நிரலும் அந்தோ பரிதாபம்!


இலங்கை மின்சார சபையின்
புதிய கட்டிட திறப்பு விழா ரத்தும்
கல்முனை அரசியல் நிகழ்ச்சி நிரலும்
அந்தோ பரிதாபம்!

சுமார் 70000 மின்சார பாவனையாளர்களை கொண்ட கல்முனை - இலங்கை மின்சார சபையின் வடக்கு எல்லையாக பெரிய நீலவனை மற்றும் நாவிதன்வெளியும் மேற்கு எல்லையாக சம்மாந்துறை வங்காளவடியும் தெற்கு எல்லையாக அட்டாளைச்சேனை போன்ற இடங்களை எல்லையாக கொண்டுள்ளதுடன், கல்முனை பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்தின் கீழ் சம்மாந்துறை, நிந்தவூர் மற்றும் கல்முனை போன்ற இடங்களில் பாவனையாளர் சேவை நிலயங்களையும் அடடளைச்சேனை மற்றும் சாய்ந்தமருது போன்ற இடங்களில் உப பாவனையாளர் சேவை நிலையங்களையும் கொண்ட கிழக்கு மாகாணத்தின் கூடியளவு மின்சார நுகர்வினை கொண்ட ஒரு முக்கிய மின் பாவனைப் பிரதேசமாகும்.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த மின்சார சபையின் கல்முனை பிரதேச மின் பொறியியலார் காரியாலயம் ஆனது அது ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை வாடகைக் கட்டிடடத்திலேயே இயங்கி வந்தது. கிழக்கு மாகாணத்தில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கும் ஒரே ஒரு அலுவலகமும் இதுவே என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வகையில் கல்முனை பிரதேச மின் பொறியியலார் நிலையத்திற்கான சொந்த கட்டிட தேவை சுமார் மூன்று தசாப்த காலமாக உணரப்பட்டு பல பிரயத்தனங்கள் மேட்கொள்ளப்பட்டும் அரசியல் வாதிகளாலும் பல மின் பொறியியலார்கலாலும் பல்வேறு காரணகளினால் இயலாமல் போனது.

எனினும் எதுவித அரசியல் செல்வாக்கும் அற்ற நிலையியல் கல்முனை பிராந்திய மின் பொறியியலார் பார்ஹான் அவர்களின் தனிப்பட்ட முயற்சியில் சென்ற 2015ம் ஆண்டு இக்காரியாலையத்திற்கான அடிக்கல் நடப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டும் விழாவில் அரசியல் வாதிகள் யாரும் பங்குபற்றவில்லை மாறாக இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் மட்டுமே பங்குபற்றினர், அத்துடன் மேலதிக பொதுமுகாமையாளரே விஷேட அதிதியாக இங்கு அழைக்கப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடமானது கல்முனையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தலை நிமிர்ந்து காட்சி தந்தது. இதற்குரிய அனைத்து புகழும் மின் பொறியியலார் பர்ஹான் மற்றும் மின்சார சபை ஊழியர்களேயே சாரும்.

அத்துடன் சாய்ந்தமருதில் இயங்கி வந்த உப பாவனையாளர் சேவை நிலையத்தையும் பிரதான பாவனை சேவை நிலையமாக தரமுயர்த்தும் செயற்பாட்டையும் சிறந்த ஆளுமையுடன் எவ்வித அரசியல்வாதிகளின் உதவியும் இன்றி இலங்கை மின்சார சபையின் சில சட்ட திட்டங்களுக்கு அமைய இதை தரமுயர்த்த முடியும் என்று அதற்கான நடவடிக்கையில் இறங்கி பொது முகாமையாளரின் அனுமதியை பொறியியலார் பர்ஹான் பெற்றுவந்தார். இதுவே யதார்த்தமான உண்மை.

இந்நிலையில், மேற்படி காரியாலயத்தையும் சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையயத்தை தரமுயர்த்தி மக்கள் பாவனைக்கு கையளித்தல் போன்ற விழாவினை இன்று (01.02.2019) கல்முனை பிரதேச மின் பொறியியலாலாரும் அதன் ஊழியர்களும் மேற்கொள்ள ஆயத்தமாகினர். அடிக்கல் நாட்டு விழா எவ்வாறு இடம் பெற்றதோ அதே போன்றே எவ்வித அரசியல்வாதிகளின் பங்குபற்றுதல்கள் இன்றி விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் வேலைப் பழு காரணமாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் வர முடியாமை காரணமாக மேலதிக பொது முகாமையாளர் அதிதிதியாக அழைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கான அணைத்து ஏட்பாடுகளும் நேற்று மாலை பூர்த்தி செய்யப்படட்டது.

துரதிஷ்டாவசமாக நேற்று இரவு இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின் உத்தரவு படி மேற்படி விழா ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணமாக அரசியல்வாதி ஒருவர் தன்னை இவ் விழாவிற்கு அழைக்கவில்லை என மின்சக்தி அமைச்சருடன் தொடர்பு கொண்டு முறையிட்டு இந்த காரியத்தினை செய்து சாதனை புரிந்துள்ளார்எனத் தெரிய வருகின்றதாம்..

இந்த செயற்பாட்டின் காரணமாக பாவனையாளர்கள் மிகுந்த சிரமங்களை இன்று எதிர் கொண்டனர். கல்முனை பிராந்திய மின் பாவனையாளர் அலுவலகத்தின் தொலைபேசி மற்றும் இணைய வலையமைப்புக்கள் அனைத்தும் புது அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதினால் புதிய இணைப்பு பெறல், மின் தடங்கல் பற்றிய முறைப்பாடு, மின் பட்டியல் வழங்கும் செயற்பாடு போன்ற பல நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.

தன்னை விழாவிற்கு அழைக்காமைக்காக பொது மக்களையும் ஊழியர்களையும் இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயல்பாட்டை என்னவென்று கூறுவது???.





No comments:

Post a Comment