Monday, February 4, 2019

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் ஐதேகவின் யோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிராகரிப்பு


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற
உறுப்பினருடன் இணைந்து
தேசிய அரசாங்கத்தை அமைக்கும்
ஐதேகவின் யோசனை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிராகரிப்பு



ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ள மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ளது,

வரும் 7ஆம் திகதி இந்த யோசனை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில், இன்று காலிமுகத்திடலில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்ததிட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசை அமைப்பது பற்றி பேசப்படுகிறது.அது தேவைதானா? நான் ஊடகங்களில் அதை கண்டேன்.அதனை நான் நிராகரிக்கிறேன்.ஒரு எம் பியை சேர்த்து தேசிய அரசு அமைப்பது சரிதானா?

ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சியுடன் தேசிய அரசாங்கத்தை அமைப்பது எவ்வாறான ஒழுக்க நெறி என்பது தனக்குத் தெரியும் என்றும், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளைத் தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment