Saturday, February 2, 2019

விபத்தில் உயிரிழந்த விரிவுரையாளர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்


விபத்தில் உயிரிழந்த விரிவுரையாளர்
வீட்டிற்கு சென்று
ஆறுதல் கூறிய ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்

மட்டக்களப்பு குடியிருப்பு பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்த 49 வயதுடைய மட்டக்களப்பு அரசினர் கலாசாலையின் விரிவுரையாளர் . கோமலேஸ்வரனின் வீட்டிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் விஜயம் செய்து அவருடைய பிரிவால் வாடும் மனைவி ,மகன் ,குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

மேலும் மரணமடைந்த விரிவுரையாளரின் மனைவி வாழைச்சேனை கிண்ணையடியில் அமைந்துள்ள பாடசாலையில் ஆசிரியராக கடமை புரிகின்றார். அவரின் நன்மை கருதி கிழக்கு ஆளுனர் ஆசிரியர் வசிக்கும் செங்கலடி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு உடனடியாக இடமாற்றம் வழங்கும்படி மாகாண கல்வி பணிப்பாளருக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் உத்தரவு பிறப்பித்தார்.






No comments:

Post a Comment