Sunday, March 31, 2019

இலங்கையில் கடந்த மே, டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் கிடைக்கப்பெற்ற நீர் எங்கே? தேக்கங்களில் பிடித்து வைப்பதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா? அமைச்சர்களிடம் மக்கள் கேள்வி


இலங்கையில் கடந்த மே, டிசம்பர் மாதங்களில்
பெய்த பலத்த மழையால் கிடைக்கப்பெற்ற நீர் எங்கே?
தேக்கங்களில் பிடித்து வைப்பதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
அமைச்சர்களிடம் மக்கள் கேள்வி
இலங்கையில் கடந்த மே மாதமும் டிசம்பர் மாதமும் பலத்த மழை பெய்து வெள்ளத்தினால் 17 மாவட்டங்கள் நீரில் மூழ்கி 8 பேர் வரை பலியாகியுமிருந்தனர்
இந்நிலையில், தற்போது நீர் தேக்கங்களில் நீர் இல்லை அதனால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டியுள்ளது என அரசாங்கம் கூறுவதன் மூலம் இந்த அரசாங்கத்தில் தூர நோக்குள்ள அமைச்சர்கள் இல்லையா? எதிர்கால நடவடிக்கைகளுக்காக திட்டமிட்டு செயலாற்றக்கூடிய நீர்ப்பாசன பொறியியலாளர்கள் இல்லையா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மழை வெள்ளத்தால் நிரம்பி வழிந்த நீர் எங்கே போய்விட்டது? அது முற்றாக கடலுக்குள் செலுத்தப்பட்டுவிட்டதா? அந்த  நீரை தேக்கங்களில் பிடித்து வைப்பதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரத்திற்குப் பொறுப்பான அமைச்சுக்கள் இவைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்விகளை மக்கள் எழுப்புகின்றனர்.






No comments:

Post a Comment