Monday, April 29, 2019

பலியான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு



பலியான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை
54 ஆக அதிகரிப்பு


இலங்கையில் கடந்த 21ஆம் திகதி  நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட 42 வெளிநாட்டவர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 12 வெளிநாட்டவர்கள், குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் காணாமல் போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவமனையில் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ள சடலங்களுக்குள் இவர்களின் சடலங்களும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதனால், உயிரிழந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் 5 வெளிநாட்டவர்கள் இன்னமும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment