Monday, April 1, 2019

அம்பாறை மாவட்ட கரையோர விவசாயிகளின் தேவைகளில் கரிசனை காட்டாத மக்கள் பிரதிநிதிகள்


அம்பாறை மாவட்ட கரையோர விவசாயிகளின்
தேவைகளில் கரிசனை காட்டாத மக்கள் பிரதிநிதிகள்




அம்பாறை மாவட்டத்திலுள்ள சேனநாயக்க சமுத்திரத்தில் கடந்த சில வருடங்களாக விவசாயம் செய்வதற்கு தேவையான போதியளவு நீர் நிறைவதில்லை எனக் கூறப்படுகின்றது.
அம்பாறைப் பிரதேசத்தில் பெய்யும் மழையினால் அல்லாமல் பதுளைப் பகுதியில் இருந்து ஓடிவரும் நீரினால்தான் சேனநாயக்க சமுத்திரம் நீரினால் நிறைந்து காணப்படும்.
ஆனால், கடந்த சில வருடங்களாக சேனநாயக்க சமுத்திரத்தில் போதியளவு நீர் நிறைவதாக இல்லயாம். பதுளைக்கும் சேனநாயக்க சமுத்திரத்திற்கும் இடையில் எங்கோ ஒரு இடத்தில் நீர்த் தேக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு பதுளையில் இருந்து ஓடிவரும் நீர் மறிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது விடயத்தில் அம்பாறை மாவட்ட கரையோர நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராயவேண்டும் என கரையோர விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
விவசாயிகளின் பிரச்சினைகள் சம்பந்தமாக அம்பாறைக் கச்சேரியில் இடம்பெறும் கூட்டங்களுக்கு கரையோரப் பிரதேச எம்.பிக்கள் முறையாக்க் கலந்து  விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைப்பதில்லை எனவும் விவசாயிகள் குறை தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் கரையோரப் பிரதேச மக்கள் பிரதிநிதிகளாக இருந்த எம்.ஏ.அப்துல் மஜீத், ஏ.ஆர்.மன்சூர் போன்றவர்கள் கடமையின் நிமிர்த்தம் கொழும்பில் இருந்தாலும் இப்படியான விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு தேடும் கூட்டங்களில் கண்டிப்பாகக் கலந்து கொள்வதற்காக பிரதேசத்திற்கு ஓடிவந்து கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால். தற்போதய அரசியல்வாதிகள் விவசாயிகளின் இப்படியான கூட்டங்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என கவலை வெளியிடும் விவசாயிகள் இக்கூட்டத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் தங்களுக்கு சாதகமான தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவதாகவும் கரையோர விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment