Tuesday, April 2, 2019

கல்முனையைப் பாதுகாக்கும் கலந்துரையாடலில் சாய்ந்தமருது, மருதமுனை, நற்பட்டிமுனை ஊர்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படாதது ஏன்? மக்கள் சந்தேகம்!


கல்முனையைப் பாதுகாக்கும்  கலந்துரையாடலில்
சாய்ந்தமருது, மருதமுனை, நற்பட்டிமுனை
ஊர்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படாதது ஏன்?
மக்கள் சந்தேகம்!

கல்முனையைப் பாதுகாக்கும்  கலந்துரையாடலில் சாய்ந்தமருது, மருதமுனை, நற்பட்டிமுனை ஊர்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது மக்கள் மத்தியில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 

சாய்ந்தமருது, மருதமுனை, நற்பட்டிமுனை பிரதேசங்கள் உள்ளடக்கியதுதான் கல்முனை என்று வாதம் புரியப்படுகின்றது.

ஆனால் இன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் சாய்ந்தமருது, மருதமுனை, நற்பட்டிமுனை பிரதேசங்கள் உள்ளடக்கிய ஊர் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

இக்கூட்டத்தில் கல்முனைக்குடி சகோதரர்கள் மாத்திரம் கலந்து கொண்டது ஏன்?
 ஏனைய ஊர்களின் பிரதிநிதிகளை அழைக்காமல் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
இந்த கேள்விகள் மக்களால் எழுப்பப்படுகின்றது.





No comments:

Post a Comment