Thursday, May 2, 2019

மதூஷை நாடு கடத்துவதுடன் தொடர்புடைய தீர்ப்பு 09ம் திகதி வரை ஒத்திவைப்பு


மதூஷை நாடு கடத்துவதுடன் தொடர்புடைய தீர்ப்பு
09ம் திகதி வரை ஒத்திவைப்பு


டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 09ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் , அதன் காரணமாக தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் என கோரி மாகந்துரே மதூஷ் தனது சட்டத்தரணிகள் ஊடாக டுபாய் நீதிமன்றில் இதற்கு முன்னர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதன்படி , அந்நாட்டு நீதிமன்றம் அது குறித்த தீர்ப்பை இன்று வழங்குவதாக அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் , குறித்த தீர்ப்பு எதிர்வரும் மாதம் 9ம் திகதி வரை டுபாய் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment