Thursday, May 2, 2019

இரண்டாம் தவணைக்காக சகல பாடசாலைகளும் 6ஆம் திகதி ஆரம்பம்


இரண்டாம் தவணைக்காக
சகல பாடசாலைகளும் 6ஆம் திகதி ஆரம்பம்



பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் இரண்டாம் தவணைக்காக சகல பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்போது சகல பாடசாலைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்றும் பாதுகாப்பு பிரிவின் பரிந்துரைக்கமைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு, அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பாதுகாப்பு பிரிவு, பாடசாலை அபிவிருத்தி குழு என்பவற்றுடன் பெற்றோரை இணைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment