Friday, June 28, 2019

ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை - திங்கள் அன்று பொதுமக்களிடம் கையளிப்பு


ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை
- திங்கள் அன்று பொதுமக்களிடம் கையளிப்பு



ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முழு வசதிகளைக் கொண்ட புதிய வைத்தியசாலை எதிர்வரும் திங்கட்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. சுகாதாரம் போசாக்கு மற்றும் தேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன கலந்துக்கொள்ளவுள்ளார்.

இந்த வைத்தியசாலைக்கு 46.8 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து அரசாங்கம் இதற்கு நிதி உதவி வழங்கியுள்ளது.

850 கட்டில்களை கொண்டுள்ள இந்த வைத்தியசாலை நவீன வைத்திய உபகரணங்களை கொண்டுள்ளதுடன் சத்திர சிகிச்சை அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. வைத்தியர்கள் தாதியர் ஆகியோர்களுக்கான உத்தியோகப்பூர்வ இருப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



No comments:

Post a Comment