Friday, June 28, 2019

தம்பாளை அல்-ரிபாய் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்….


தம்பாளை அல்-ரிபாய் மஹா வித்தியாலயத்தில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தை
ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்….

எழுச்சிபெறும் பொலன்னறுவைமாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 186 இலட்ச ரூபா செலவில் தம்பாளை அல்-ரிபாய் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 08 வகுப்பறைகளைக் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (28) முற்பகல் இடம்பெற்றது.

பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

வகுப்பறைக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார்.

பாடசாலையின் அதிபர் .அஸீஸ், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.










No comments:

Post a Comment