Monday, July 29, 2019

அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகும் நேரத்தை மாற்றினார் ஜனாதிபதி மைத்திரி


அமைச்சரவைக் கூட்டம்  ஆரம்பமாகும்
நேரத்தை மாற்றினார்
ஜனாதிபதி மைத்திரி

அமைச்சரவைக் கூட்டங்களை இனிமேல் காலையில் நேரகாலத்துடன் நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம், செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த அமைச்சரவைக் கூட்டங்கள் இனிமேல் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமைச்சரவைக் கூட்டங்கள் செவ்வாய்கிழமைகளில் காலை 9.30 மணிக்கே ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment