Sunday, August 4, 2019

10 நாட்களுக்குள் உத்தரவு பெறாவிடின் இந்த ஆண்டு மாகாணசபை தேர்தல் இல்லை


10 நாட்களுக்குள் உத்தரவு பெறாவிடின்
இந்த ஆண்டு மாகாணசபை தேர்தல் இல்லை


எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் உச்சநீதிமன்ற உத்தரவைப் பெற முடியாது போனால், இந்த ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியாமல் போகும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவை இன்னும் 10 நாட்களுக்குள் பெற முடியாமல் போனால், அது ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்படுத்தல்களுடன் மோதுகின்ற நிலையை ஏற்படுத்தும்.

எனவே, மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த ஆண்டிலேயே நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

வரும் செப்ரெம்பர் 20ஆம் திகதிக்கும், ஒக்ரோபர் 15ஆம் திகதிக்கும் இடையில் தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடும்.

2018 வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடைபெறும்என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment