Friday, August 30, 2019

ஹக்கீமுடன் கோத்தா தொலைபேசியில் பேச்சு



ஹக்கீமுடன் கோத்தா தொலைபேசியில் பேச்சு



சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, கோத்தாபய ராஜபக்வுக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும்  கூறப்படுகிறது.

எனினும், இந்தப் பேச்சு தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது. ஐதேக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

கடைசியாக நடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் இந்தக் கட்சி ஐதேக தலைமையிலான கூட்டணி நிறுத்திய வேட்பாளரையே ஆதரித்து வந்தது.

No comments:

Post a Comment