Thursday, August 29, 2019

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் விபத்துகள் மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவின் கட்டிடம் இன்று காலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்.


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்
விபத்துகள் மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவின் கட்டிடம்
இன்று காலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன
திறந்து வைத்தார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட விபத்துகள் மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவின் கட்டிடத்தை இன்று 29 ஆகஸ்ட் 2019 காலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில்  சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் சுகாதார அமைச்சர் பீ.தயாரத்ன, கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







No comments:

Post a Comment