Sunday, August 4, 2019

வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலுக்கும் பள்ளிவாசலுக்கும் எவ்வித தொடர்புமில்லை


வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில்
நேற்றிரவு இடம்பெற்ற மோதலுக்கும்
பள்ளிவாசலுக்கும் எவ்வித தொடர்புமில்லை



நேற்றிரவு  வெள்ளவத்தை, மயூரா பிளேஸ் பகுதியில் உள்ள முஹியதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுவரும் பல்லின தொழிலாளர்கள் இடையே மதுபோதை காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி,  பள்ளிவாசலை சூழ பெரும் அச்சம் நிலவியது.

பின்னர் உடனடியாக அங்கு விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு அமைதிநிலை தோற்றுவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மோதலில் இரு பொலிஸார் உட்பட 5 பேர் காயம் எனவும் ஒருவர் கைது செய்யப்பட்ட தாகவும் இன்று காலை தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த மோதலுக்கும் பள்ளிவாசலுக்கும் எவ்வித தொடர்புமில்லையென்றும், பள்ளிவாசலுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லையென்றும் பள்ளிவாசல் நிர்வாகம் உறுதிபட தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment