Monday, September 2, 2019

ஒக்டோபர் 11ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு


ஒக்டோபர் 11ஆம்  திகதி
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்
தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு



எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்டோபர் 11ஆம்  திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ளது.
                                                                                                                                               
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினால், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நடைபெறவில்லை.

இந்த தேர்தலை உடனடியாக நடத்துமாறு உச்சநீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவிட்டது.


No comments:

Post a Comment