Monday, September 2, 2019

பிரதமர் மாலைதீவுடன் 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்து


பிரதமர் மாலைதீவுடன்
4 புரிந்துணர்வு 
உடன்படிக்கைகளில்
கைச்சாத்து

நேற்றைய தினம் மாலைதீவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்துள்ளார்.
                                                                                                                                                                            
வீசா அனுமதிப் பத்திரம் வழங்குவதை இலகுபடுத்தல், சமூகப் பாதுகாப்பு, உயர் கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் இளையோர் அபிவிருத்தி ஆகிய துறைகளின் கீழ் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

90 நாட்களுக்கான வீசா வசதிகளை இலவசமாக பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இரண்டு நாடுகளினதும் பிரஜைகளுக்கு கிடைத்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக அல்லது முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட எதிர்ப்பார்ப்பவர்கள் இந்த வீசா வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்படுவதற்கு முன்னர் மாலைதீவு ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அதிதிகளுக்கான குறிப்பேட்டில் தனது கருத்தை பதிவிட்டார். அதன் பின்னர் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியுடன் உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.















No comments:

Post a Comment