Sunday, September 1, 2019

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே?


தேசிய ஜனநாயக முன்னணியின்
ஜனாதிபதி வேட்பாளராக
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே?



தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடக் கூடும் என, கட்சியின் சிரேஸ்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சித் தலைவர் போட்டியிட மறுத்தால் அல்லது பரப்புரை மேற்கொள்ள முடியாமல் பலவீனமான நிலையில் இருந்தால் தவிர, கட்சியின் தலைவரே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐதேகவின் யாப்பில் கூறப்பட்டுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு கிடைக்கும் என்றும் தனது பெயரை வெளியிட விரும்பாதசிரேஸ்ட அமைச்சர், தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment